உரைகளில் முற்றுச்சொற்களின் பயன்பாடு

Authors

  • K. Kamalakrishnan SRM Arts and Science College, India

Keywords:

தொல்காப்பியம், நன்னூல், பவணந்திமுனிவர், சிவஞானமுனிவர், பரிமேலழகர், நச்சினார்க்கினியர், முற்றுச்சொற்கள், வினையெச்சத் தொடர்கள், எச்சம் முற்றாதல்., Tolkappiyam, Nannul, Pavanandi Munivar, Sivagnanamunivar, Parimalajagar, Naccinarkkiniyar, Verbal Phrases, Adverb complement.

Abstract

In Tamil, a verb performs traid functions in term of showing tenses, such as, past, present and future. Along this it also displays other grammatical functions. As its functionality is concerned, it also performs adequate role to ensure the function of verbal phrase is performed appropriately. The use of adverbs in the text of Parimelazhagar and Nachinarkiniyar clearly display the role of verbal phrases and adverbs clearly with their residual participles. This article explains the role of singular adverb, plural adverb, plural adverb, adverb of doing, adverbial adverb, adverbial adverb, adverbial-adverbial, adjective-adverbial, feminine adverbial, future plural adverb, superlative plural adverbial, adverbial adverbial, adverbs in those texts, comparatively.

ஆய்வுச்சுருக்கம்

வினைமுற்றுச் சொல்லானது இறப்பு, எதிர்வு, நிகழ்வு என முக்காலத்தையும், தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடப் பெயர்களுடனும் வரும். ஒரு முற்றுச்சொல்லானது தெரிநிலை வினையாவும், குறிப்பு வினையாகவும் வந்து முற்றுப்பெறும் தன்மை கொண்டதாகும். பரிமேலழகர் உரையில் வரும் முற்றுச்சொற்களின் பயன்பாடு, நச்சினார்க்கினியர் உரையில் வரும் முற்றுச்சொற்களின் பயன்பாடு, எச்சம் துணைவினையைக்கொண்டு முற்றாதல் ஆகியன குறித்து இவ்வாய்வுக் கட்டுரையில் விரிவாய் காணலாம். தனித்தன்மை முற்றுச்சொல், பலர்பால் படர்க்கை முற்றுச்சொல், அஃறிணைப்பன்மை வினைமுற்று, செய்யும் என்னும் முற்றுச்சொல், வியங்கோள் வினைமுற்று, அல் ஈற்று வியங்கோள், அகர ஈற்று வியங்கோள், வினையெச்சம் வேறுபல பெயர் பெற்று முற்றாதல், பெண்பால் படர்க்கை வினையெச்சமுற்று, எதிர்காலத் தன்மைப்பன்மை வினையெச்சமுற்று, உயர்திணைப் பலர்பால் படர்க்கை தெரிநிலை வினையெச்சமுற்று, வினையெச்சம் வினைகுறிப்பு முற்றாய்த் திரிதல், செய்தெனெச்சம் வினைக்குறிப்போடு முற்றாதால், வினையெச்சம் வினைக்குறிப்பு முற்றாதல் ஆகியன உரையாசிரியர்களின்வழி முற்றுப்பெறும் தன்மையை இனம் காண்பதாக அமைந்துள்ளது.

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2022-12-10

Issue

Section

Articles