தொன்னூறுகளுக்குப்பின் மலேசியத் தமிழ் நாவல்கள் (1990-2007) (Malaysian Tamil Novels after the Nineties (1990-2007))
DOI:
https://doi.org/10.22452/JIS.vol12no1.4Keywords:
Novel Resources, Malaysian Tamil Novel, Malaysian Literature, Malaysian Tamil Novel Trends, நாவல் வளம், மலேசிய தமிழ் நாவல், மலேசிய இலக்கியம், மலேசிய தமிழ் நாவல் செல்நெறிகள்Abstract
This article is aimed at giving the details of the development Novels, the catalyst, the important milestones, their trends, their thematic approaches and the turning points in the history of novel productions that have been witnessed in Malaysian setting since 1990’s Special focus has been given on studying the catalyst of novel and short novels development, their quality and their nature, especially in last decades of 20th century (1997-2007). Interest has been given in knowing and verifying the exposition of phenomena, especially the social issues revolving the Indian community that have been captured in these novels. Efforts also have been given in studying the aspects of the Malaysian representation in the novels that turn them be unique from others, in the novels that have been produced after 1990’s.
ஆய்வுச் சுருக்கம்
இக்கட்டுரை தொன்னூறுகளிலிருந்து இன்றுவரையில் மலேசியத் தமிழிலக்கியத்தில் நாவல் பற்றிய பொதுவான செய்திகளை விளக்குதல், தொன்னூறுகளுக்குப்பின் மலேசியத் தமிழ்நாவல் வளர்ச்சியில் காணப்படும் முக்கியத் திருப்புமுனைகள், கிரியா ஊக்கிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை அறிந்து விளக்குதல், தொன்னூறுகளுக்குப்பின் மலேசியத் தமிழ்நாவல் வளர்ச்சிக்கு அதிகமான பங்களிப்பினைச் செய்துள்ள நாவலாசிரியர்களை அடையாளங்கண்டு குறிப்பிடுதல் ஆகும். தொன்னூறுகளுக்குப்பின் வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் வளர்ச்சியில் காணப்படும் நாவல், குறுநாவல் பற்றிய ஒருமைப்பாடு, வேறுபாடு ஆகியவற்றை விளக்குதல், தொன்னூறுகளுக்குப்பின் குறிப்பாக அண்மைய பத்தாண்டுகளில் (1997-2007) வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் உள்ளடக்கத்தின் முக்கியப் போக்குகளை அறிவதோடு அவற்றின் தரமும் திறமும் பற்றி விளக்குகின்றது. தொன்னூறுகளுக்குப்பின் வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் (1997-2007) உள்ளடக்கத்தில் காணப்படும் நிகழ்காலச் சமுதாயத்தின் சமகாலப் பிரச்சினைகளை அடையாளங்கண்டு விளக்குதல் மற்றும் தொன்னூறுகளுக்குப்பின் வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் (1997-2007) உள்ளடக்கத்தில் வெளிப்படும் மலேசிய மண்ணின் மணம், அடையாளங்கள், மலேசியத் தன்மைகள் ஆகியவற்றை அடையாளங்கண்டு வெளிப்படுத்துதல் ஆகியனவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.